விடை பெறும் ஒவ்வொருவரும்
அளவுக்கதிகமான வலிகளையும்
ஆறுதலுக்காக நினைவுகளையும்
கொடுத்து செல்பவர்களே

வெற்றி பெற விரும்பினால்
பயம் என்பது உன் மனதில்
இடம் பிடிக்காமல் இருக்க வேண்டும்

கைவிடாதவன் தான்
வெற்றியை பிடிப்பான்

அனைத்தும் நிழலாகி
மறையும் வலிகளை
மட்டும் நிரந்திரமாக்கிவிட்டு

வாழ்கை சுழன்றாலும்
மனசு தப்பாமல் சுழல வேண்டும்
அதுவே சீரான பயணம்

நம்மை தவிர்க்க
நினைப்பவர்களுக்கு
விலகி வழி விட்டு
ஒதுங்கி செல்லுதல் கூட
ஒரு வித நாகரிகம் தான்

புன்னகையால் தொடங்கும் நாள்
எதையும் தாண்டும் வலிமை தரும்

ஒரு பிரச்சனையின் ஆயுள்
பெரும்பாலும் அதை
விடப் பெரும் பிரச்சனை
வரும் வரை தான்

மன்னிக்க தெரிந்தவர்களுக்கு
வாழ்க்கை எப்போதும்
அழகாக தான் தெரியும்

அன்பும் பாசமும்
விலை பொருள் அல்ல
மனதிற்கு பிடித்தவர்கள் மேல்
வரும் அழகான உணர்வு
உணர்வுகளை மதிப்போம்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுப்போம்