நாம் நேசித்தவர்கள்
நம்முடன் இல்லையென்றாலும்
நலமாக வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பதே
உண்மையான அன்பு

சிலருக்கு நாம் மட்டுமல்ல
நம்முடைய அன்பும்
தொல்லையாக தான்
தெரியும்

நண்பர்கள்
தவறு செய்தால்
மன்னித்து விடாதே
மறந்து விடு

இன்று இருக்கும் நிழல்தான்
நாளை வரும் ஒளியின் விலை

தவறுகள் இருந்தால்தான்
வாழ்க்கை பயிற்சி பெறுகிறது

எதிர்ப்பாராத சில
திருப்பங்களுக்கு முன்
ஓர் புரியா இருட்டு
நம்மை கடப்பது உண்டு

சூரியன் மறைந்தாலும்
மறுநாள் மீண்டும் உதயமாகும்
அதுபோல இன்று முடிந்ததெல்லாம்
நாளை ஒரு புதிய வாய்ப்பாக தோன்றும்

வாழ்க்கையில்
எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை
நம் மீது
அன்பும் அக்கறையும்
கொண்ட சில உறவுகள்
மட்டும் கிடைத்தால்
போதும்

வாழ்வின் அர்த்தம்
சுவாரஸ்யத்தில் இல்லை
சோதனைகளை சமாளிக்கும்
திறனில் தான்

எத்தனை வருடங்கள்
கடந்து திரும்பிப் பார்த்தாலும்
நானா இது என்று மட்டுமே
அதிசயப்பட வைப்பதே
வாழ்க்கையின் சிறப்பு