தோல்வி கற்றுக்கொடுப்பது பயமல்ல
மீண்டும் முயற்சிக்க வேண்டிய தைரியம்

முடிவிற்கு முன்
நீ முயற்சி செய்தால்
முடியாதது எதுவும் இல்லை

நாம் எல்லோருமே
விடைகளை தேடுகிறோம்
நாமே புதிர்கள்
என்பதை மறந்து

சோகத்தை மறைத்த சிரிப்பு
ஒரு அழகான கவசம்

தோல்வியில் இருந்து
எதையும் கற்றுக்
கொள்ளவில்லை
என்றால் அதுதான்
உண்மையான தோல்வி

வாழ்வும் வரம்
ஆளும் உன்னன்பில் அன்பே

நினைவுகள்
என்னை
துரத்த
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக

நாம் உணர்ந்து
விரும்பி செய்யும்
காரியங்கள் மட்டுமே
நம் வாழ்க்கையை
அழகுபடுத்தும்

ஆசைப்படுவது எல்லாம்
அனுபவமாக கிடைக்கிறது
உதட்டில் புன்னகை
மட்டும் மாறாமல்

லாபத்தினால் மட்டும்
ஒருவன் பணக்காரனாவதில்லை
சேமிப்பதால் மட்டுமே ஆக முடியும்
உழைக்கும்போது
எதிர்காலத்தை நோக்கி
சென்ற நினைவுகள்
ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை
நோக்கி செல்லும்