இந்த வாழ்க்கை
உனக்காக
படைக்கப்பட்டது
அதை
மற்றவர்களுக்காக
இழந்து விடாதீர்கள்

நிராகரிப்பு உணர்ந்தவர்களுக்கு
மட்டுமே புரியும் இதன்
வலியும் வேதனையும்
மரணத்தை விட கொடியது

அவ்வளவு அன்பையும்
மறக்க வைக்கும் கோபம்
எவ்வளவு கோபத்தையும்
மறக்க வைக்கும் அன்பு

இயற்கையை நாம் வைச்சு
செய்தால் இயற்கை திரும்ப
நம்மளை வைச்சு செய் செய்
என்று செய்துவிட்டு போய்விடும்

கண்ணீர் சொல்வது
வார்த்தைகளால்
சொல்ல முடியாத கதைகளை

என்னடா இது வாழ்க்கை
என்ற சலிப்பு தோன்றும்
போதெல்லாம்
மாற்றம் தந்து வாழ விரும்பிட
சில அன்புகள் காரணமாகின்றன

கண்ணீர் விழுந்த இடம் தான்
உண்மை மனிதன்
உருவாகும் இடம்

கடலில் நின்று
கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார்
நீந்த கற்றுக்கொடுத்த தந்தை
(கேட்டதில் வலித்தது)

அனுபவசாலிகள்
வயதை கடந்த
வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து
வருபவர்கள்

சிரிக்கும் பொது
வாழ்க்கையை
ரசிக்க முடியும்
ஆனால்
துன்பத்தின்போது தான்
வாழ்க்கையை புரிந்து
கொள்ள முடியும்