உண்மையாக இருப்பவர்கள்
கொஞ்சம் திமிரோடு
தான் இருப்பார்கள்

மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் சாரலோடு
மழையில் நனையும் போது
துன்பங்கள் கூட சந்தோசமாக
மாறி விடுகிறது

பயம் இருக்கலாம்
ஆனால் பயணிக்க
தைரியம் முக்கியம்

உயரங்களிலிருந்து விழும்போது
தாங்கிப்பிடிக்கும் நண்பர்களை
பெற்றிருப்பது கடவுளின் பரிசு

விலகியவர்களுக்காக
மனம் வருந்தாதே
நம்முடன் இருக்க
அவர்களுக்கு தகுதி
இல்லை என்று
திமிராக கடந்து செல்

எதிரியை ஜெயிக்கணும்னு
முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய
ஒற்றை ஆயுதம்
புன்னகை மட்டுமே
எவ்வளவு
தொல்லைகள் கொடுத்தாலும்
எப்போதும் சந்தோஷமாய்
இருக்கிறானே என்கிற
நினைவே அவனை
கொன்றுவிடும்
(மகிழ்ந்திரு)

தரையை கிழிக்கும்
விதமாக விழுந்தாலும்
மீண்டும் மண்ணில் இருந்து
எழும் வேர்கள் போல உழை

திறமை என்பது
யாரோ சொல்லி
வருவது அல்ல
நமக்குள் இருப்பது
அதை வெளிப்படுத்தவும்
சில அவமானங்கள்
தேவை தான்

தியானம் செய்வதன் மூலம்
வாழ்வை மேலும்
புரிந்து கொள்ளலாம்

ஆசையே துன்பத்திற்கு காரணம்