எதிர்பார்ப்புகளை
குறைத்துக் கொள்
உழைப்பை அதிகமாக்கிக் கொள்
நிம்மதி உன்னைத் தேடி வரும்
மகிழ்ச்சி எப்போதும்
உங்கள் கையில்
தான் உள்ளது
அகங்காரமில்லாது
பேசி பாருங்கள்
அகிலமும்
அமைதியாய் தெரியும்
ஆத்திரமில்லாது
யோசித்து பாருங்கள்
அனைத்தும்
நல்வழியாய் தெரியும்
சிலரிடம்
சில விஷயங்களை
புரிய வைக்க
கஷ்டபடுவதை விட
சிரித்துவிட்டு
கடந்து செல்வது
நல்லது
வலியின் முடிவில்
ஒரு அமைதி பிறக்கும்
பிறர் சொல்லும்
கடுஞ்சொற்களை
கொண்டு அஞ்சாதே
நீ சாதிக்க பிறந்தவன்
சில திருத்தங்கள்
கடுமையானவை தான்
ஆனால் பாதையை
தொடர்வதற்கு
கடந்து தான் ஆக வேண்டும்
நீர் விழுவதை ரசிக்கும்
ஒருவனுடன் பழகலாம்
நீ விழுவதை ரசிக்கும்
ஒருவனுடன் பழகாதே
கவலைகளை அனுபவிக்கும்
போதே தெரிகிறது சிலருக்கு
தாம் இத்தனை நாள்
இருந்தது சொர்க்கத்தில் என்று
சிரிப்பும் சோர்வும்
கலந்து தான் வாழ்க்கையின்
உண்மையான ரசம் உருவாகிறது
📖 பக்கம் 277 / 606
📋 Copied