மரியாதை
வயதை பொறுத்து
வருவதில்லை
அவர்கள்
செய்யும் செயலை
பொறுத்து வருகிறது

வாழ்க்கையில்
பொறுமை உள்ளவனே
பெரும் பாக்கியசாலி

வலி இருந்தாலும்
நம் மனம் அதை ஏற்றுக் கொண்டால்
அது புதிய வழிகளை காட்டும்

நேர்மை
உழைப்பு
மற்றும் நம்பிக்க
இவை தான் வாழ்க்கையின்
வெற்றிக்கான மூன்று மூலிகைகள்

இன்று கடினமாக இருக்கலாம்
நாளை இன்னும் மோசமாக
இருக்கலாம் ஆனால் நாளை
மறுநாள் பிரகாசமான
நாளாக இருக்கும்

விழுவதில் வெட்கப்படாதே
எழுந்து நிற்கும்
தைரியம் உன்னுடையது

மகிழ்ச்சி என்பது
பணம் சார்ந்தது அல்ல
மனம் சார்ந்தது

நினைவுகள் சில
சமயங்களில் வரம்
சில சமயங்களில் சாபம்

தோல்வியின் கண்ணீர் தான்
வெற்றிக்கான
வழிகாட்டும் ஒளி

தூரத்து சொந்தம் என்பது போல
தூரத்து நண்பன் என்று
யாருமே இல்லை
ஏனெனில் நண்பனான பின்னர்
யாரும் தூரம் இல்லை