வாழ்க்கை ஒரு புத்தகம்
அதை எத்தனை பக்கங்கள்
படிக்கிறோம் என்பதல்ல
எத்தனை பாடங்கள் கற்கிறோம்
என்பதே முக்கியம்

சாதனை என்பதோ
காத்திருக்கக் கூடியவர்களுக்கு
கிடைக்காது
போராடுபவர்களுக்கு மட்டுமே
கிடைக்கும்

புரிதல் என்பது
அன்பினால்
வருவது அல்ல
அனுபவத்தில் வருவதே

நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

பிடிக்குதோ
பிடிக்கலயோ
ஒவ்வொரு நாளையும்
புன்னகையோடு கடந்து
வருவோம்

பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை

பத்து திங்கள் தாய்
பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஓரே உயிர் அப்பா

நிஜ அன்பு பாராட்டும்
போலி அன்பு
பொறாமை காட்டும்

உன்னை நம்பாதவர்கள்
உன் வெற்றிக்குப் பின்னால்
நடனம் ஆடுவார்கள்

கண்ணீரின் சுமையை
சிரிப்பால் மறைக்க
கற்றுக்கொள்வதே
உண்மையான தைரியம்