ஏமாற்றம் வலியைதந்தாலும்
நல்வழியையும் காட்டும்
வாழ்க்கைக்கு

நம்பிக்கை இல்லாத மனம்
அடைக்கப்பட்ட கதவைப் போல

பணத்தை மட்டும் சேர்க்காமல்
நண்பர்களையும் சேர் வாழ்வில்
மகிழ்ச்சி வேண்டுமென்றால்

மகிழ்ச்சியாக இருப்பதற்கு
முயற்சி செய்வதில்லை
மகிழ்ச்சியாக
இருப்பது போல்
காட்டிக் கொள்ளவே
பலரும் முயற்சிக்கின்றார்கள்

அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த
பாடங்களை மறந்து விடாதே

கண்ணீர் சிந்தும்
நேரம் பலவீனமல்ல
அது மனதை
சுத்தப்படுத்தும் மழை

கடந்ததை நினைக்காதே
அதிலிருந்து கற்றுக்கொள்

அலைப்பாயும் கடலுக்குள்
அமைதியான பாயல் இருக்கும்
அது போலவே வாழ்க்கையிலும்
அமைதியை தேட
தெரிந்தால் தான் நிம்மதி

வாழ்க்கையில்
பாசமும்
நம்பிக்கையும்
இல்லாமல் வாழ்வது
சலிப்பானது

மனிதனின் விரல்கள்
அனைத்தும் சமம்
இல்லை ஒப்பீட்டு
பேசும் அளவுக்கு
எல்லா மனிதனும்
நல்லவனும் இல்லை