சோகமான தருணங்கள் தற்காலிகம்
ஆனால் அவற்றை
கடந்து செல்வதே
நம் உண்மையான சாதனை
அன்பு காட்டி சிலரும்
காயப்படுத்தியே சிலரும்
மனதில் நீங்கா இடம்
பிடித்து விடுகிறார்கள்
இரு வித மனிதர்களை
மறக்கவே முடிவதில்லை
உங்களின்
வசதியோ
பணமோ
அழகோ
உங்களை உயர்த்துவதில்லை
உங்களின் நற்செயலே
உங்களை உயர்த்தி காட்டும்
நல்லதையே சிந்திப்பீர்
நல்லதையே செய்வீர்
சின்ன சின்ன
ஆசைகள் தான்
எதிர்பார்ப்பு தான்
ஆனால் அவை
நடந்தேரினால்
வாழ்க்கை மகிழ்ச்சி
நேசித்தவர் பிரியும் பொழுது
நெஞ்சம் நெருப்பாய்
கொதிக்கத்தான் செய்யும்
தோல்விகளைக் கண்டு துவளாதே
அவை உனக்குக் கிடைக்கும் பாடங்கள்
பாடங்களைக் கற்றவன் மட்டுமே
வரலாற்றைப் படைக்கிறான்
ரொம்ப சிந்திச்சா
மனசு வலிக்கும்
அப்புறம்
தலை வலிக்கும்
வாழ்க்கையையும்
மனுஷங்களையும்
அவங்க அவங்க
போக்கிலேயே விட்டுறணும்
அதான் நமக்கு நல்லது
மௌனம் பேசும் போது தான்
உள்ளம் அழுகின்றது என்பதை
யாரும் கவனிக்க மாட்டார்கள்
மற்றவர்களின்
கைதட்டலுக்காக ஓடாதே
உன் இலக்கை எட்டிய பின்
உலகம் தானாகக் கைதட்டும்
நிழலைத் துரத்துவதை நிறுத்து
நாம் என்ன செய்கின்றோம்
என்பதை அறிந்து
செய்தாலே பாேதும்
தாேல்வி நம்மை விட்டு
சற்று விலகியே இருக்கும்
📖 பக்கம் 270 / 606
📋 Copied