உள்ளம் அழுகின்ற போது
வெளியில் இருக்கும்
சிரிப்புகளும் பொய்தான்
வாழ்க்கை ஒரு நதி மாதிரி
எதிர்ப்புகளோடு ஓடினாலும்
கடைசியில் அது
கடலோடு கலந்து விடும்
நாம் எத்தனை தானங்கள்
செய்தாலும் பிறரிடம்
காட்ட வேண்டிய பெரிய
தானம் நிதானம் தான்
நீ ஏமாந்தால்
உலகம் வேறொரு வாய்ப்பை தரும்
ஆனால் நீ உன்னை விட்டுவிட்டால்
யாரும் உன்னைக் காப்பாற்ற முடியாது
சந்தோஷமா வாசிக்க
முடியாத கடந்த காலம்
எல்லோர் வாழ்விலும்
இருக்க தான் செய்கிறது
உறவோ பொருளோ
ஆதியிலே இருக்கும் ஆர்வம்
இறுதி வரை இருப்பதில்லை
எளிமையைப் புரிந்தவர்களே
வாழ்க்கையை உணர்ந்தவர்கள்
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது
உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே
வாழ்நாளெல்லாம் அடிமையாக
தொட்டிக்குள் வாழ்வதைவிட
பிடிபட்ட அன்றே சட்டியில்
குழம்பாக கொதிப்பது மேல்
📖 பக்கம் 269 / 606
📋 Copied