எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்

எட்டாத உயரத்தில்
இருப்பதால்தான் என்னவோ
எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது
(நிலா)

வலிக்கும் ஆனால்
வலிக்காத மாதிரி
சிரிச்சுக்கிட்டே வாழனும்
அவ்வளவு தான் வாழ்க்கை

உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று

யாருமின்றி செல்லும்
தனி பயணம் தான்
உலகமே நமக்காய் இருக்கிறது
என்பதை உணரச் செய்கிறது

நோக்கத்தைக் கடந்து செல்லும்
விடாமுயற்சியே
வெற்றியின் வாசல்

நமக்குள் இருக்கும் அமைதி
உலகத்தை வெல்வதற்கு
தேவையான முதல் ஆயுதம்

நடப்பதை
மாற்ற இயலாது
என்பது நம்பிக்கை
நடப்பதை சிந்தித்து
சிறப்பாக செய்வது
நம் திறமை

ஒரு விளக்கின் வெளிச்சம்
அதை சூழ்ந்திருக்கும்
இருளை மட்டுமே அழிக்க முடியும்
அதேபோல் உன் அறிவு
உன் வாழ்வின் இருளை நீக்கும்

மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது