மனது மரத்துப் போவதற்கு
நோய் மட்டும்
தேவை இல்லை
ஏமாற்றங்களும்
சில துரோகங்களும் போதும்
நம் வாழ்வை
மகிழ்வுடன்
கடத்தி செல்ல
பிறரிடம் லிமிட்டாக
பழக வேண்டும்
ஒவ்வொரு நாளும்
புதிய ஆரம்பம்
ஒவ்வொரு தவறும்
புதிய பாடம்
இல்லாததை நினைத்து
ஏங்காமல் இருப்பதைவைத்து
வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது
சோம்பேறிகளுக்கு
வெற்றியின் ருசி தெரியாது
முயற்சி செய்பவர்களுக்கு அது
தினசரி உணவாக மாறும்
சோகத்திலும்
இன்பத்திலும்
பிரியாமல்
பிரியமாக இருக்கும்
உறவே போதும்
வாழ்க்கை
சிறப்பாக இருக்கும்
வெறும் ஆசை
கொண்டால் போதாது
அதற்கான அதிரடி செயலும் தேவை
வாழ்க்கை எளிதல்ல
ஆனால் உணர்வுகள்
இருப்பதால்தான் அழகு
உன்னுடைய நிகழ்காலம்
சிறப்பாக இருந்தால்
உன்னுடைய மோசமான
கடந்தகாலத்தை பற்றித்தான்
இந்த உலகமே
விவாதித்துக்கொண்டு இருக்கும்...!
📖 பக்கம் 26 / 606
📋 Copied