முட்டாள்கள் வாயால் பேசுவார்கள்
புத்திசாலிகள் செயலால் பதிலளிப்பார்கள்

யாரிடமும் பேச
வேண்டாம் என்ற
மனநிலை உருவாகக்
காரணம் அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்

பொய்யாகவே
இருந்து விட்டு போகட்டும்
சில உறவுகளின் நேசம்
அதை கண்டு கொள்ளாமல்
கடந்து செல்லுங்கள்
நிரந்தர நிம்மதிக்காக

கவலைகளை அனுபவிக்கும்
போதே தெரிகிறது சிலருக்கு
தாம் இத்தனை நாள்
இருந்தது சொர்க்கத்தில் என்று

தவறு செய்யாதவனையும்
நடுக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது
(குளிர்)

வலிகளை ஏற்றுக்கொண்டால்
தான் வாழ்க்கை அழகாகும்

சிறு சிறு முடிவுகள்தான்
பெரிய மாற்றங்களை
உருவாக்கும்

அவசரபட்டு
இழந்ததை எல்லாம்
அசிங்கப்பட்டு தான்
பெற வேண்டி உள்ளது
இவ்வாழ்வில்

அழுகை என்பது
பலம் இழப்பதற்கே அல்ல
மனது தூய்மை பெறுவதற்கே

இன்பத்தை சுமந்திடும்
சிறு மனதை கேட்டேன்
இறைவனிடத்தில்
அவனோ வலியை மட்டுமே
தாங்கும் மனதை
அளித்தான் என்னிடத்தில்