மௌனத்தில் மூச்சும் கூட
சலனமாக இருக்கிறது
சில மனிதர்கள்
உன் வெற்றியை
பார்க்க முடியாமல்
மாறிவிடுகிறார்கள்
எல்லாம் பறந்துபோனாலும்
அனுபவம் மட்டும்
உயிருடன் நின்றிருக்கும்
வாழ்க்கை கடலென இருந்தாலும்
நம் மனம் தான்
அதன் திசைமாற்றும் கப்பல்
அவமானங்கள் என்றும்
பிறரால் ஏற்படுவதில்லை
தமக்கு தம்மால் ஏற்படுத்தி
கொள்ளப்படுகிறது
உழைப்புக்கு விலையே இல்லை
ஆனால் அது தரும் வெற்றி
கோடிக்கணக்கில் இருக்கும்
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்
நிலையில்லா
நீர்குமிழியல்ல
நட்பு
அதன் உள்ளிருக்கும் காற்று
நிரந்தரமானது
மகிழ்ச்சி தேடி ஓட வேண்டியதில்லை
அது ரசிக்க தெரிந்த மனதில் உருவாகும்
தோல்விக்குப் பின்னாலும்
நம்மை நேசிப்பவர்கள் தான்
உண்மையாய் இருப்பவர்கள்
📖 பக்கம் 265 / 606
📋 Copied