தோல்வி என்பது
முடிவின் பெயர் அல்ல
மாற்றம் தேடும் அரம்பம்
நான் எடுக்கும் முடிவு
சரியானதா என்று
எனக்குத் தெரியாது
ஆனால் எடுத்த முடிவை
நான் சரியாக்குவேன்
சிறிய முயற்சிகள் கூட
தினமும் சேரும்போது
பெரிய வெற்றியை உருவாக்கும்
உழைப்பை நேசிப்பவனுக்கு
அதிர்ஷ்டம் தேடி வர
வேண்டியதில்லை
பேசுபவற்றை தவறாக புரிந்துக்
கொள்பவனிடம் மௌனமாகவும்
தவறாக பேசுவதற்காகவே
வாயைத் திறப்பவர்களிடம்
விலகியும் இருங்கள்
வெறுப்பை
சொல்வதற்குத்தான்
வார்த்தைகள் வேண்டும்
அன்பை சொல்வதற்கு
கண்களே போதும்
எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு...!
முடிந்தால் முயற்சி செய்
முடியவில்லை என்றால்
அதற்கு மேலும் முயற்சி செய்
உன்னை குறைத்து
மதிப்பவர்கள் பலர் இருப்பார்கள்
உன்னை உயர்த்துவது
உன் நம்பிக்கையே
கஷ்டங்கள் வந்து கொண்டே
தான் இருக்கும் நாம்
கடந்து சென்று கொண்டே
இருப்போம் சோர்ந்து விடாதே
சோர்ந்து இருந்து விடாதே
📖 பக்கம் 264 / 606
📋 Copied