வாழ்க்கையில் சில நேரம்
மௌனமே மிகப் பெரிய பதில்

நிழல் கூட
வெளிச்சத்தை எதிர்பார்க்கும் போது
நீ ஏன் முயற்சியை தவிர்க்கிறாய்?

பிறரின் வெற்றியை வெறுப்பது
சொந்த தோல்வியை
கொண்டாடுவதுடன் சமம்

துயரங்களை எதிர்கொள்வது
வாழ்க்கையின்
ஒரு அங்கமாகும்
ஆனால் அவற்றை
கடந்து செல்லும் சக்தி
நமக்குள் உள்ளது

நாம் வெற்றி
பெற வேண்டும்
என்று உழையுங்கள்
அடுத்தவர்களை
தோற்கடிக்க வேண்டும்
என்று நினையாதீர்கள்

தேடிப் போகாதே
அலட்சியப்படுத்தப் படுவாய்
எதிர்பார்க்காதே
ஏமாற்றப் படுவாய்

ஆரம்பிக்க நேரம் பார்க்காதே
செய்து முடிக்க நேரத்தை உருவாக்கு

காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்

தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை

சில பாதைகள் கடினமாக இருக்கும்
ஆனால் அதுவே நம்மை வலுவாக்கும்