எதிர்த்து நிற்கும் துணிவை பெற்று விட்டாலே போதும் எத்துன்பமும் பறந்து விடும்
எதிர்காலத்தின் பிரச்சனையை சமாளிக்க இன்று துணிந்தால் நாளை ஒரு புதிய ஆரம்பமாகும்
எவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள் விழும் அடிகள் தரும் வலியை விட வார்த்தை தரும் வலிகள் அதிகம்
கனவுகள் கலைந்தால் கண்ணீர் வருவதில்லை வாழ்க்கைப் பாதை தொலைந்தால் வலி வருவதில்லை நிழல் தேடி அலைந்தால் நிம்மதி வருவதில்லை உண்மை புரிந்தால் உறவுகள் வருவதில்லை
மண்ணில் விழும் விதைகள் அழுவதில்லை வேராக வலுப்படுவதே வாழ்க்கை
தனிமை என்பது வலி என்று யார் சொன்னது தனிமை என்பது வழி நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை
இடையூறுகளே இல்லையெனில் வாழ்க்கை ஓர் வெறுமை போலத்தான் இருக்கும்
பயமுறுத்தும் சூழ்நிலைகள் தான் உனக்குள்ள வீரனைக் கண்டுபிடிக்கும்
அனுபவம் வாழ்க்கையின் ஆசிரியர் அதில் கற்றதுதான் உங்கள் வெற்றியின் ஆரம்பம்