சில பாதைகள் கடினமாக இருந்தாலும் அவை நம்மை சரியான திசைக்கு இட்டுச் செல்கின்றன
எல்லா மானிடருக்களுக்கு பின்னாலும் மறைக்கப்பட்ட கதையும் மறுக்கப்பட்ட கதையும் இருந்து கொண்டு தான் இருக்கிறது
சில விசயங்களை எளிதில் மறந்துவிடும் பாக்கியம் எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை
எப்போதும் கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் உங்களிடம் வந்தாலும் அவற்றை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள் உங்கள் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துங்கள் பின்வாங்காதீர்கள் உங்கள் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும்
மலரும் நினைவுகளிலும் சில வாடியேதான் இருக்கின்றது
நம் சிந்தனை மாற்றத்தை நோக்கி இருந்து நம் செயல் முயற்சியை நோக்கி இருந்தால் காலம் வெற்றியை பரிசளிக்கும்
தோண்டித் தோண்டிப் பார்த்தாலும் எல்லா வேர்களுமே அழுக்காக தான் இருக்கும்
அழ நினைத்தால் ஆசைதீர அழுதுவிடு கண்ணீரின் முடிவில் சுமைகளும் கரையுமென்றால்
நட்பு என்பது ஒற்றுமையின் அடையாளம் இதை என்றும் காப்பாற்றுங்கள்
இன்பத்தில் இணையாக துன்பத்தில் துணையாக எனக்கு ஒப்பற்ற உறவாய் இருப்பது நண்பர்கள் மட்டுமே