உன்னை
அடையாளப்படுத்தி கொள்
பிரபலப்படுத்தி கொள்ளாதே
வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே
வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை
சில வலிகள்
நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு
காலம் தள்ளிப் போகும்
என்று நினைத்தது
வாழ்க்கை முன்னே
செல்வதற்கான தள்ளுபடி தான்
பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
பழி சொல்ல தெரிந்த
யாரும் உனக்கு வழி
சொல்ல போவதில்லை
உன் வாழ்க்கை உன் கையில்
வலியை கடந்த மனம் தான்
கருணை கற்றுக்கொள்கிறது
உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை
பிடித்தவர்களிடம்
பேசி கொண்டே
இருக்க வேண்டும்
என நினைக்காதீர்கள்
அந்த எண்ணமே அவர்களை
நம்மிடமிருந்து பிரித்து
வைத்து விடும்
அருகில் இருப்பவர்களின்
பாசத்தை உணராமல்
தொலைவில் இருப்பவர்களின்
அன்பை தேடிக்கொண்டு
இருக்கிறோம் தொலைபேசியில்
கடினமான தருணங்கள்
உன்னை முறியடிக்க அல்ல
மாற்றி உயர்த்த வந்தவை
📖 பக்கம் 258 / 606
📋 Copied