வாழும் இந்த வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரம் இல்லை
எதிலும் உண்மையும் இல்லை

நிஜத்தை ரசிக்கும்
மனம் தான்
போலிகளை ரசித்து
கொண்டு இருக்கிறது
(அறியாமையால்)

இயற்கை இறைவனின் பரிசு
உருவாக்கி விட்டு அழித்தால்
நியாயம் அழிப்பதை மட்டுமே
வேலையாகக் கொண்டால்
அது பாவம் அடுத்த தலை
முறைக்கு செய்யும் துரோகம்

நாம் ஒன்றை நினைத்து
ஒரு முடிவு எடுத்தால்
அது நமக்கு எதிர்மாறாக
அமைந்து விடுகிறது
சில மனித மனங்களை
போலவே

எவ்வளவு நாளுக்கு
பின் பேசினாலும்
முன்பிருந்த அதே
பாசமும் நேசமும்
மாறாமல் பழகும்
நட்புகளே
நமக்கு கிடைத்த
வரங்கள்

ஆழமான
பல சிந்தனைகளை
கடந்திடவும்
அழுத்தமான
பல முடிவுகளையும்
எடுத்திடவும்
மன உறுதியை வளர்த்திட
முனைகிறேன் நான்

சிறிய வெற்றிகள் தான்
பெரிய கனவுகளின் படிக்கட்டு

நாளை
இந்நேரம் வரும்
ஆனால் போனது
போனது தான்

பயமுறுத்தும் சூழ்நிலைகள் தான்
உனக்குள்ள வீரனைக் கண்டுபிடிக்கும்

விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு