சில உறவுகள் தொலைந்து
போன பிறகு தான்
அவை நமக்கு
எவ்வளவு முக்கியமோ புரிகிறது

ஓர் முத்தம்
எனது தோல்விகளை
மறக்கும் மருந்து

வெற்றியின் போது
கை தட்டியவர்கள்
தோல்வியிலும் கைக்கொடுத்தால்
சோதனையில் இருந்து
எளிதாக சாதனை படைக்கலாம்

வாழ்வில் உண்மையும்
அன்பும் நிறைந்திருந்தால்
வாழ்வு எப்போதும்
மகிழ்ச்சியாகவே இருக்கும்

காற்று எதிர்ப்பது
மரங்களை வலிமையாக்குகிறது
தடைகள் மனிதரை வலிமையாக்குகிறது

சில தருணங்கள்
நடக்கவேண்டும் என்பதற்காகத்தான்
காலம் பொறுமை காட்டுகிறது

மனதுக்கு நிம்மதியை
தரக்கூடிய எந்த இடமாக
இருந்தாலும் அது
உனக்கு நந்தவனமே

மாறும் காலங்களைப் பத்திரமாக
பார்த்தால் தான்
வாழ்க்கையின் மேசேஜ் புரியும்

ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை

மௌனம் சோகத்தின்
முதல் மொழி
அதை வாசிக்கத் தெரிந்தவனே
உணர்வுகளை புரிந்து கொள்வான்