பழகிய இருவரை
அன்பால் இணைத்தால்
அது அன்பின் வெற்றி
ஆக முடியாது
இருவரும் மனதால்
புரிந்து இறுதி வரை இணைந்து
அந்த உறவை தக்க வைத்துக்கொள்ளவதே
அன்பின் வெற்றியாகும்
சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு
அன்று இரவெல்லாம்
பகலுக்காக காத்திருந்தேன்
உன்னை நேரில் காண்பதற்கு
இன்று பகலெல்லாம்
இரவுக்காக காத்திருக்கிறேன்
என் கனவில் காண்பதற்கு
மனதை அமைதியாக்கும் சக்தி
அன்புக்கு மட்டுமே உண்டு
வாழ்கையில் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளும்
கடந்துப்போன காலங்களூம்
மாற்றங்களும் ஏமாற்றமும்
வதைக்கும் நினைவுகளும்
மனதில் ஒருவருக்கு
இறப்பின் வலியை
உயிரோடு உணர்த்திவிடுகிறது
சரிவு முடிவாக இருக்காது
அது உச்சத்திற்கான
தொடக்கம் மட்டுமே
திறக்க முடியாத
பூட்டு எதுவும் இல்லை
தீர்க்க முடியாத
துன்பம் எதுவும் இல்லை
வாழ்க்கையைப் பற்றி யார்
சொல்லிக்கொடுத்தாலும்
அவ்வளவாக புரியாது
வாழ்க்கையே சொல்லிக்கொடுக்கும்
அப்போது தான் தெளிவாக புரியும்
முயற்சி செய்யாதவனுக்கு
முதுகு எலும்பு கூட
வளையாது விடாமல்
முயற்சி செய்பவனுக்கு
அந்த பாறாங்கல் கூட
வலைந்து கொடுக்கும்
ஆசை வளர்ப்பதும்
ஆணவம் பெருகுவதும்
மனிதனது அழிவுக்கே அறிகுறி
📖 பக்கம் 256 / 606
📋 Copied