எத்தனை அவமானபட்டாலும்
அன்பு இல்லாத இடத்தை
நோக்கியே மனம்
குழந்தையாய் ஓடுகிறது
சிலர் காயப்படுத்தும்
போது வராத வலி
அதை நியாயப்படுத்தும்
போது வந்துவிடுகிறது
மகிழ்ச்சியை விட
மறதி தான் தேவைப்படுகிறது
நிம்மதியாக வாழ்வதற்கு
பிடித்ததை வைத்துக்
கொள்ளுங்கள்
ஆனால் எதையும்
பிடித்து வைத்து
கொள்ளாதீர்கள்
தோல்வி நம்மை
தள்ளுவதே தவிர
நம்மை அழிக்க முடியாது
யார் முதலில் பேசுவது
என்ற தலைக்கனத்தில்
பலர் பேசாமலே
பிரிந்து விடுகின்றனர்
காதலுக்கு எல்லைகள்
உண்டு ஆனால் நட்பிற்கு
எல்லைகள் கிடையாது
எளிதில் கிடைக்கும்
வெற்றி நீடிக்காது
உழைப்பில் கிடைத்த வெற்றி
நிலைத்து நிற்கும்
சுழற்சி நிலைக்காது
என்பதால்தான் வாழ்க்கை
சுவாரஸ்யமடைகிறது
பிறர் கொடுக்கும் தனிமையில்
நம்மை அறியலாம்
நாமாக எடுக்கும் தனிமையில்
உலகை ரசிக்கலாம்
(ரசிக்கின்றேன் உலகை)
📖 பக்கம் 255 / 606
📋 Copied