முயற்சி என்பது
கணிக்க முடியாத சக்தி
தொடக்கத்தில்
சுத்தமாகத் தெரியாது

வாழ்க்கையை அனுபவிப்பவர்கள்
நீண்ட காலம் வாழ்கிறார்கள்

வெற்றி கூச்சலிட்டு வராது
அது அமைதியில்
வேலை பார்க்கும்

பிரியமுள்ள உறவுடன்
பிரிய மனமில்லாமல்
பிரியமுடன் வாழும்
வாழ்க்கையே
ஒரு தனி
அழகு தான்

புதியது வந்தால
பழையதின் அருமை
தெரியாது
ஆனால் காலத்தின்
கட்டாயத்தினால்
பழையதின் அருமை
தானாக புரியும்

இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது

முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்

நேர்மை என்பது
பேச்சு மட்டுமல்ல செயல்
கண்ணியம் என்பது
தோற்றம் மட்டுமல்ல நடத்தை
கருணை என்பது
உதவி மட்டும் அல்ல அன்பு
நாம் அனைவரிடமும்
நேர்மையாகவும்
கண்ணியமாகவும்
கருணையோடும்
இருக்க முயற்சி செய்வோம்

சாவு இல்லாத வீடும்
சலனமே இல்லாத
மனமும் இன்னும்
உருவாக்கப்படவே இல்லை

அளவில்லாத
அன்பு ஒருநாள்
அர்த்தமற்று
போய்விடுகிறது