ஈரம் பட்ட மண்ணில்
விழும் கால் தடங்களை
விட காயம்பட்ட மனதில்
எழும் வடுக்கள்
வார்த்தையில் அடங்காது
பரிதாபம் வேண்டாம்
போராடும் மனதை
வளர்த்து கொள்
ஒருவர் தந்த காயங்கள்
மன்னிக்கப்பட்டு விடலாம்
ஆனால் ஒருபோதும்
மறக்க படுவதில்லை
வாழ்க்கை ஒரு பாடல் மாதிரி
சரியான சுருதி தேட
இன்னும் சில வரிகளை
தவிர்க்க நேரிடும்
எல்லாம் நன்மைக்கே
என்று கடந்து செல்லும்
மணப் பக்குவம்
இருந்துவிட்டால் வாழ்வில்
நிம்மதி நித்தியம் உண்டு
சில நேரங்களில்
பேசாத ஒரு கண் பார்த்து
மனது அழுதுவிடும்
தடைகளை
பயமென்று எண்ணாதே
அவை உன்னால்
வெல்லப்பட்ட பாடங்கள்
தன்னம்பிக்கை
உன்னைக் காப்பாற்றும் கவசம்
அதை அணிந்து
இலக்கத்தை நோக்கி போ
நினைத்தது போல்
எல்லாம் நடந்தது
ஆனால் கனவுபோல்
எல்லாம் ஒருநொடியில்
நடந்து முடிந்துவிட்டது
கலைந்து சென்ற மேக
கூட்டங்கள் வரைந்து
சென்ற ஓவியமே நிலா
காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்
📖 பக்கம் 253 / 606
📋 Copied