சில நேரங்களில் சில இடங்களில் பார்வையாளர்களராக இருப்பது மட்டுமே சாலச் சிறந்தது
போராடும் மனிதர்களிடம் தோல்வியும் ஒருநாள் தோற்றுப் போகும்
வாழ்க்கை ஒரு இசை போல் சுருதி தவறினாலும் பாட்டை நிறைவு செய்ய முடியும்
தோல்வி ஓர் இழப்பு அல்ல அது வழியைப் புரிந்துகொள்ள ஒரு மொழிபெயர்ப்பு
தொலைவு பாரக்காமல் நடந்தால் இலக்கு நெருக்கமாகும்
வெற்றி என்பது ஒரு நாள் மேடை ஏறுவது மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் உன் மன அமைதியை இழக்காமல் போராடுவதுதான்
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் வியக்க வைத்து பின்பு ரசிக்க வைத்து கடைசியில் அவமானப்படுத்தும்
நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் போதும் அமைதி கிடைக்கும்
வாழ்க்கையில் நாம் சந்தித்த நபர்களில் சிலரால் சிரிக்கவும் சிலரால் கண்ணீர் சிந்தவும் சிலரால் சிந்திக்கவும் செய்திருப்போம் இவை அனைத்தும் நம்பிக்கையில்லா நட்புகளே
முயற்சி செய்யும் நேரம் தான் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் நேரம்