வெளிச்சம் தேவை என்றால்
கண்ணை மூடிய நிலைமையை
நீங்கவேண்டும் அதே போல
முன்னேற்றம் வேண்டுமானால்
பயத்தை கழற்றவேண்டும்

வெற்றிக்கு ஆபத்து
எதிரிகள் இல்லை
நண்பனில் பிறந்த
பொறாமை தான்

உன் முன்னால்
புகழப்படும் பொன்னான
வார்த்தைகளைவிட
உன் பின்னால்
புகழப்படும் சாதாரண
வார்த்தைகள் தான்
உனக்கான மதிப்புமிக்க
சான்று ஆகும்

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே
இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

பிடிக்காதவரை
நேசிக்க தொடங்கிவிட்டால்
இனி பிரிவுக்கே
இடமில்லை

சோர்வடைந்து விடாதே
வாழ்க்கை நீ
எதிர்பாக்காத
நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை
கொண்டுவரும்

ஆரோக்கியம் என்பது செல்வம்
உடல் ஆரோக்கியம் இல்லாமல்
வாழ்க்கை முழுமையாக இல்லை
ஆரோக்கியமான உடல்
ஆரோக்கியமான மனதை உருவாக்கும்
இதுவே வாழ்க்கையின்
உண்மையான மகிழ்ச்சி மற்றும்
வெற்றியின் அடிப்படையாகும்

நம்பிக்கை உள்ளவன்
எப்போதும்
புதிய பாதையை
காண முடியும்

வீரன் தோல்வியைக்
கண்டு ஓட மாட்டான்

பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை