✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்
content_copy
நாம் ஆடிய ஆட்டமும்
நடத்திய கூத்தும்
ஒரு நாள் ஓய்வு பெறும்
அப்போது
கூடுகிற கூட்டம் சொல்லும்
நாம் யார் என்பதை
வாழ்க்கையை
கவனமாக வாழுங்கள்
content_copy
சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன்
சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும் போதும்
அழாமல் இருப்பதே...!
content_copy
இரண்டு வாய்ப்புகள்
மாற்ற முடியாதவற்றை
ஏற்றுக் கொள்வது
ஏற்றுக் கொள்ள
முடியாதவற்றை
மாற்றி காட்டுவது
content_copy
ஆதவன் வரும் நேரம்
கவலைகளுக்கு அஞ்சலி
செலுத்தும் நேரம்
content_copy
பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது
content_copy
விக்கல்
வரும்போதெல்லாம் யாரோ
உன்ன நினைக்குறாங்க
என்றவுடன்
யாரோ ஒருவரை
நம் மனதும்
நினைக்கத்தான் செய்கிறது
(நினைவுகள்)
content_copy
காதலித்தால்
தான் கவிதை வருமாம்
நானும் காதலிக்கின்றேன்
கவிதையெழுத தாய்மொழியை
content_copy
நாளைய வெற்றிக்கு
இன்றைய வலி
ஒரு பயிற்சி தான்
content_copy
யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்
📖 பக்கம் 251 / 606
arrow_back
arrow_forward
📋 Copied