வாழ்க்கை என்பது போட்டி அல்ல
பயணம். ஒவ்வொரு அடியும்
அர்த்தமுள்ளதாக இருக்கட்டும்

வாழ்க்கை ஒரு கடல் போல
அலைகள் வந்தால்
கண்ணீர் வீசாமல்
கரையை நோக்கி முன்னேறு

அன்பு காட்டுபவர்கள் அழகாக
இருக்கிறார்களா என்பது
அவசியம் இல்லை அவர்கள்
காட்டும் அன்பு அழகாக
இருக்கிறதா என்பதே அவசியம்

சில வலிகள்
கண்ணீராக வெளிப்படும்
சில வலிகள்
நினைவுகளாக நிலைத்து நிற்கும்

பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்

நடுக்கத்தை விடுத்து
நடக்க தொடங்கினால்
வெற்றி உன் பின்னே ஓடும்

அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது

முடியாது என்று சொல்லும் உலகமே
முயற்சி செய்தால் மௌனமாகும்

வயதுக்கு தகுந்த
சந்தோசத்தை கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய துன்பத்தை தருகிறது
இந்த வாழ்க்கை

உரிமை எடுத்துக்கொண்டு
நம்மிடம்
கோபம் கொள்ளும் உறவுகள்
எளிதில் எல்லோருக்கும்
அமைவது இல்லை