இதயம் வெளிப்படுத்த
முடியாத வார்த்தைகள்
தான் கண்ணீர்

நேசிக்க யாருமில்லாத
போது நம்மை யோசிக்க
வைக்கிறது இந்த வாழ்க்கை

குழந்தைகளின்
புன்னகையே
நாம் காணும்
சந்தோஷ உலகம்

ஆயிரம் புரிதல்கள்
இருந்தாலும்
சில சறுக்கல்களும்
வந்து போகிறது
நம் அளவு கடந்த
அன்பிற்கு சவாலாக

எளிதில் கிடைக்கும் வாழ்க்கையில்
அர்த்தம் இல்லை
கடினத்தில் தான்
கண்ணியமும் நினைவும் இருக்கும்

அக்கறை எல்லாம்
அக்கரையில் இருக்கும்
வரை தான்
இக்கரை வந்தால்
அக்கறை காணாமல்
போகும்

பிறந்து விட்டோம்
என்று வாழாதீர்கள்
இனி பிறக்கப்போவதில்லை
என்று நினைத்து வாழுங்கள்

வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது

நேற்று நடந்ததை
மறந்தா தான்
இன்று உன்னால்
சிரிக்க முடியும்

புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்