யாரோ போட்ட
கோட்டில் ஓடாதே
உனக்கான பாதையை
நீயே செதுக்கு
சுயமாகச் சிந்திப்பவனுக்கு
அழுத்தம் என்பதே இருக்காது
தோல்விகள்
வழிகாட்டும் ஒளிவிளக்குகள்
நடக்க மறந்தால்தான் இருட்டாகும்
பிறர் வளர்வதை பார்த்து
சோகம் அடைந்தால்
உன் வளர்ச்சி நீயே தடுக்கிறாய்
பதுங்குகிறேன்
என்ற பெயரில்
உறங்கி விடாதீர்கள்
காலம் அதிவேகமானது
கனவுகளை நிஜமாக மாற்ற
ஒரு முயற்சி போதாது
தொடர்ச்சியான முயற்சியே
வெற்றியின் சூத்திரம்
உழைத்தவரின் வெற்றி
தாமதமாகலாம்
ஆனால் தவறாமல் வரும்
வெளிப்படையாக சிரித்து
பேசுபவர்களுக்கு தான்
மனதில் வெளிக்காட்ட
முடியாத பல வேதனைகள்
மறைந்திருக்கும்
ஒரு நாள் உங்கள் கண்களில்
ஒழுகும் கண்ணீர்
உங்கள் வெற்றிக்கான
விதையாக மாறும்
சிறிய முயற்சிகளும்
தொடர்ச்சியாக செய்தால்
பெரிய வெற்றியாக மாறும்
மற்றவர்களின் வெற்றியை
பொறாமையாக பார்க்கும் வரை
உன் வெற்றிக்கான பாதை தொடங்காது
📖 பக்கம் 24 / 606
📋 Copied