நீ விரும்பிய அனைத்தும்
உன் முன் இருக்கும் பயத்திற்கு
பின்னால் தான் உள்ளது

மகிழ்ச்சியாக இருங்கள்
இங்கு எதுவும்
நிரந்தரம் இல்லை

சொல்லத் தெரியாத
வயதில் சத்தமாகவும்
சொல்லத் தெரிந்த
வயதில் மௌனமாக
மனதிற்குள்ளும்
அழுது கொள்கிறோம்

காலம் மாறும் என
கற்பனையில் காத்திருக்காதே
நீ முயற்சி செய்யாமல்
இங்கு எதுவும் மாறாது

வாழ்க்கை எத்தனை
முறை உதைத்தாலும்
மீண்டு வர முடியும்
தன்னம்பிக்கை உன்
மந்திரமாக இருந்தால்

போலி நண்பர்கள் நிழல்கள்
போன்றவர்கள் சூரியன்
பிரகாசிக்கும்போது அவர்கள்
மறைந்து விடுவார்கள்

நேற்றைய நினைவுகள்
பயனற்றது
நாளைய நிகழ்வுகள்
கேள்விக்குறியே
இன்று மட்டுமே
நிஜம்
ரசித்து கடப்போம்
ஒவ்வொரு நொடியும்

எவ்வளவு தான்
பெரியவெற்றி அடைந்தாலும்
சிறு வயதில் கிடைத்த
சந்தோசத்திற்கு ஈடுகட்டியதில்லை

காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்

மனநிலைக்கு
தகுந்தாற்போல்
பேசி விடாதீர்கள்
மனநிலை மாறலாம்
ஆனால்
பேசிய வார்த்தை மாறாது