ஒற்றை புன்னகையில்
சாதிக்கும் குழந்தையிடம்
கற்றுக்கொள்ளுங்கள்
உறவுகளை சமாளிக்கும்
வித்தையை
மனதில் உடைந்த நினைவுகள்
சிரிப்பை கூட சுமையாக மாற்றும்
சண்டையிட்ட நாளே
சமாதானமாகும்
உறவுகள் கிடைப்பது
வரமே
தொட்டுச் செல்லும்
நினைவுகளை தான்
விடாமல் துரத்துகின்றது
மனம்
நாளை இல்லை
இன்று தான்
செயல் படவேண்டிய நேரம்
உயிர்
எழுத்தாய்
இருந்தேன்
மெய்
எழுத்தாய்
வந்தாய்
உயிர்மெய்
எழுத்தானோம்
உன் பலத்தை அறிய ஆயிரம்
பேருடன் சண்டையிடு உன்
பலவீனத்தை அறிய அரை
மணி நேரம் தனித்திரு
தடுக்கி விழும்போது
தூக்கிவிட யாரும்
வரவில்லை என்றாலும்
நிமிர்ந்து சீராக நடக்கும்போது
தடுக்கிவிட யாராவது
ஒருவராவது வருவார்கள்
(கவனம்)
மௌனம் மட்டுமல்ல
சில நேரங்களில்
தோல்விகளையும்
நேசிக்க அல்லது ஏற்றுக்கொள்ள
கற்றுக் கொண்டால்
வெற்றி நம்மை எந்நேரமும்
பற்றிக் கொள்ளும்
வாழ்க்கை என்பது
ஓர் ஓவியம்
நிறங்களை நீயே
தேர்ந்தெடுக்க வேண்டும்
📖 பக்கம் 246 / 606
📋 Copied