நம்மை தவிர்க்க நினைப்பவர்களுக்கு விலகி வழி விட்டு ஒதுங்கி செல்லுதல் கூட ஒரு வித நாகரிகம் தான்
ஒரு தோழனிடம் உணரும் தாயின் அன்பு ஒரு தோழிக்கு விலை மதிக்க முடியாத பொக்கிஷம்
வசதியாக வாழ்வதை விட மன நிம்மதியோட மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது
தோல்வி அடைந்ததும் துவண்டு போகாமல் தோல்வி தற்காலிகமானது மட்டுமே நிரந்தரமானதும் அல்ல நிலைக்க வைக்கும் அளவிற்கு நான் திறமை இல்லாதவனும் அல்ல என்று முயற்சி கொண்டு போராடுங்கள் வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும் சற்றும் தயங்காமல் நடைமுறை படுத்துங்கள்
எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பேன் என்று நிகழ்காலத்தை தொலைக்கிறேன்
வாழ்க்கை என்பது நாள்தோறும் நாம் உருவாக்கும் தேர்வுகளின் சங்கமம் அது எப்படிப் போகும் என்பதைக் நாமே தீர்மானிக்க வேண்டும்
சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான் இருக்கும் நிலையை விட மேன்மையான நிலைக்கு உயரமுடியும்
ஒரு குறையும் இல்லை எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பாய் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை