பின்னால் பேசுபவர்கள்
புகழ்ந்து பேசினால் என்ன
இகழ்ந்து பேசினால் என்ன
காதில் வாங்காமல் அடுத்த
அடி எடுத்து வைத்து
முன்னேறிக் கொண்டே இரு
கண்ணாடியில்
உன் முகம் பார்க்கும் போது
தெரியாத அழகு
என் கண்களில்
உன்னைப் பார்க்கும் போது
உனக்குத் தெரியும்
பொறாமை
வளர்ச்சியின் கதவை பூட்டும்
சிலநேரம் உடைந்து
போவது கூட புதிய
மாற்றத்திற்காக தான்
சில நேரம்
மழையாகும் சோகங்களும்
நமக்கு அமைதியை தரும்
நீ அடைவதெல்லாம் இறைவனும்
இயற்கையும் உனக்குத் தந்த
பரிசு இழப்பது எல்லாம்
நீ இன்னொருவருக்கு
கொடுக்கும் வாய்ப்பு
யாரும் யாரையும்
விட்டுவிட வேண்டாம்
சிறை பிடிக்காமல் இருங்கள்
அதுவே சிறந்தது
நாளை என்ன செய்யலாமென
யோசிக்கலாம் ஆனால்
நாளை என்ன நடக்குமோ
என யோசிக்காதீர்கள்
நிம்மதி என்பதை கெடுத்து விடும்
முயற்சி விழுந்த இடத்தில்
முடிவடையவில்லை
அது எழும் வரை பயணம் தொடரும்
வாழ்க்கை வாழ பல
வருடங்கள் இருப்பினும்
வாழ்க்கை மாற சில
நிமிடங்கள் போதும்
📖 பக்கம் 244 / 606
📋 Copied