கனவு பெரியதாக இருக்கும்
போது உழைப்பு அதை விட
பெரியதாக இருக்க வேண்டும்

சிலநேரம் இருட்டை
அனுபவிக்க வேண்டியிருக்கும்
ஒளியின் மதிப்பை உணர்வதற்கு

ஒவ்வொரு தேடலிலும்
பயணத்திலும் ஏதோ
ஒரு விசயத்தில் நட்பு
என்ற துணையோடு
தான் பயணிக்கிறோம்

கவலையை உன்
காலுக்கு கீழ்
கொண்டு வா
தூக்கி சுமக்காதே

விழுந்தாலும்
எழுவது தான்
வாழ்வின் அழகு

வெற்றி என்பது
ஒரு நாள் நிகழும் நிகழ்வு அல்ல
தொடர்ச்சியான
சிறு முயற்சிகளின் விளைவு

விரல் இடையில் நழுவிச்
செல்லும் நீர்போல நமக்கே
தெரியாமல் சில உறவுகள்
நழுவிச் செல்கிறது

மற்றவர்களை பார்த்தே
வாழப் பழகிக்கொண்ட
நமக்கு என்ன பிடிக்கும்
என்ன பிடிக்காது என்று
நாம் அறிவது கிடையாது

விழுந்தாலும்
எழுந்து நிற்பவன்
ஒருநாள் வெற்றியின்
சின்னமாக மாறுவான்

மனது மரத்துப் போவதற்கு
நோய் மட்டும்
தேவை இல்லை
ஏமாற்றங்களும்
சில துரோகங்களும் போதும்