நிஜத்தில் நடக்க வேண்டும்
என்று நினைப்பதெல்லாம்
கனவில் நடக்கிறது
கனவில் கூட
நடக்கக் கூடாது
என்று நினைப்தெல்லாம்
நிஜத்தில் நடக்கிறது

வாழ்க்கை என்பது
தடைகளை மீறி
பயணிக்கும் பயணமாக
இருக்க வேண்டும்
திசை தெரியாமல் நிற்கும்
பயமாக அல்ல

என்னை பிடிக்காதவர்களை
வெறுக்க எனக்கு நேரம் இல்லை
ஏனென்றால் என்னை பிடித்தவர்களை
நேசிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன்

தேவையற்ற சிலவற்றை
ஆராய்ந்து களையெடுத்து
மனதிற்கு வெளியே
வீசுங்கள் மகிழ்ச்சி
தானாக உருவாகும்

நிச்சயம் ஒரு நாள்
நமக்கான மகிழ்ச்சியை
வாழ்க்கை நம் கையில்
திணித்து விடும்

வெளிப்படையாக இருந்து
விடாதே பலர் உன்னை
வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்

வாழ்க்கை என்பது
ஒரு புத்தகம் போல
ஒவ்வொரு பக்கத்தையும்
படித்தே முன்னேற வேண்டும்

சோதனை வரும்போதுதான்
மனிதன் தனக்குள்ள
சக்தியை உணர்கிறான்

கிடைக்காமல்
போன இன்பத்தை விட
தேடாமல் விட்ட
இன்பங்களே அதிகம்

எதிர்பாராத தருணங்கள் தான்
வாழ்க்கையை அழகாக மாற்றும்