நோக்கம் சரியாஇருந்து
கொஞ்சம்முயற்சி
இருந்தா போதும்
வாழ்க்கை ஜம்முன்னு
இருக்கும்

முயற்சியிலேயே
அத்தியாயம் இருக்கிறது
முடிவுகள் புத்தகம் மட்டுமே

இமைகளின் கூச்சலில்
விழும் கண்ணீர்
உள்ளத்தின் சுமையை
வெளிக்கொணர்கிறது

சுவாசம் இருக்கும் வரை
வாய்ப்புகள் உண்டு
வாழ்வை அழிக்கிறது சோம்பேறித்தனமே

ஏற்றுக் கொள்ளும்
மனப்பக்குவம் வந்து
விட்டால் பிறகு என்ன
நடந்தாலும் கவலை
என்பது இல்லை

நேர்மையான முயற்சி
ஒரு நாள்
வெற்றி ஆகாமல் இருக்காது

நீ எழுந்து
நிற்கும் வரை
உலகம் உன்னை கவனிக்காது

எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்

ஒவ்வொரு தோல்வியும்
உன்னை உன்னிடம் கொண்டு
செல்லும் ஒரு சிதறல்

வாழ்க்கை ஒரு விளையாட்டு மாதிரி
எதற்கும் பயப்படாமல்
கடைசி வரை விளையாட வேண்டும்