வாழ்வின் அர்த்தம்
வெற்றி பெறுவதில் இல்லை
மன அமைதி
பெறுவதில்தான் உள்ளது

வாழ்க்கையில் எது ஒன்று
அதிக இன்பத்தை தருகின்றதோ
அதுவே சில வேளைகளில்
அதிக துன்பத்தையும் தரும்

தோல்வி வந்தால்
பாதை முடிந்தது அல்ல
புதிய பாதை தொடங்கும் அழைப்பு

உரிமை உண்டு என
நினைத்தாலும் நமக்கு
மதிப்பு இல்லையென
தெரியும் போது
ஒதுங்கிவிடுவதே மேல்

சாதிக்கும் எண்ணம்
ஆழ்மனதில் தோன்றி
விட்டால் எது இருந்தாலும்
இல்லை என்றாலும்
சாதிக்க முடியும் உன்
விடா முயற்சியால்

நம் தேடல்களில்
பல தேவையற்றவையே

அவ்வப்போது தொலைதூரப் பயணம்
சென்று அங்கேயே தொலைத்து
விட்டு வாருங்கள் உங்களைத்
தொல்லை செய்யும் தொல்லைகளை

மௌனம் பேசும்
இடத்தில் தான்
வாழ்க்கையின் வலி தெரிகிறது

போலி நண்பர்கள் நிழல்
போன்றவர்கள் அவர்கள்
உங்களை வெயிலில் பின்
தொடர்வார்கள் ஆனால்
இருட்டில் விட்டுவிடுவார்கள்

பல வருடங்களாக
கற்ற பாடத்தை
சில நிமிடங்களில்
கற்றுத்தந்து விடும்
தந்திர மனிதர்கள் உண்டு