முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்

பயத்தை தாண்டி
ஒரு அடி எடுப்பவனுக்கே
முன்னேற்றம் சொந்தம்

தேர்வுநடக்கும் போது
வாத்தியார் அமைதியாக இருப்பதும்
பிரச்சனைகள் நடக்கும்போது
கடவுள் உதவாமல் இருப்பதும்
உன்னுடைய உண்மையான தகுதியை
இந்த உலகிற்க்கு
நீயே எப்படி
நிரூபித்து காட்டுகிறாய்
என்று காட்டத்தான்

சில நேரம்
மழையாகும் சோகங்களும்
நமக்கு அமைதியை தரும்

வழியெங்கும்
நிறைய காயங்கள்
கடந்தாக வேண்டும்
வேறு வழியேதும் இல்லை
அந்நேரத்து மனநிலை
கோபம் எரிச்சலென ஏராளம்
வழியில் முட்கள் உண்டு தான்
பாதம் கிழிக்க வலி தான்
இதயம் பிளக்கும் ரணம் தான்
ஆனால் வேறுவழியில்லை

எவ்வளவு
நிறைவு இருந்தாலும்
ஏதோ ஒரு குறை
இருக்கத்தான் செய்கிறது
எல்லோரது வாழ்க்கையிலும்

சின்ன சின்ன
சந்தோஷங்கள் கூட
வாழ்க்கையை பெரிய
மகிழ்ச்சியாக மாற்றும்

தலை சாயும் நிலையே
வந்தாலும் தன்மானத்தை
ஒருபோதும் இழக்காதே

பொறுமையைக் கையாளும்
ஒருவன் எல்லாவற்றிலும்
தேர்ச்சி பெறுகிறான்

ஆயிரம் பேர் இருந்தாலும்
நமக்கு தக்க சமயத்தில்
தோள் கொடுப்பது நண்பன்