வாழ்க்கை என்பது
முடிவுகளை எதிர்பார்ப்பது இல்லை
மாற்றங்களை ஏற்கும் சக்தி

காலம் தாழ்த்தினாலும்
நமக்காக படைக்கப்பட்டது
கட்டாயம் நம்மை
வந்து சேரும்

சிரிப்பின் பின்னால்
மறைந்திருப்பதே
சோகத்தின் மிகப்பெரிய சாட்சி

மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது

சோகமான இரவு
ஒரு புதிய நம்பிக்கையின்
விடியலை தரும்

பொறாமை கொண்ட இதயம்
எப்போதும் வெற்றியிலிருந்து
தள்ளிச் செல்லும்

முதல் முயற்சி தோல்வி
என்றால் என்ன மீண்டும்
மீண்டும் முயற்சி
செய்யுங்கள் தோல்வியை
வென்றுவிடலாம் வெற்றியால்

தனிமை வேதனை என்று
நினைத்து விடாதே
சாதனை செய்யும்
அளவிற்கு சிந்தனைகளை
அது கற்று தரும்

இந்த உலகில்
எதை எதையோ
தேடி அலையும்
மனதிற்கு
இறுதியில் தேவைப்படுவது
அமைதி மட்டுமே

நடப்பதைப் பார்த்து
நின்றுவிடாதே
நீ நடந்ததைப் பார்த்து
நம்பிக்கை கொள்