அடிக்கடி தோல்வியடையும் நபர்தான்
ஒருநாள் அசைக்க முடியாத
நம்பிக்கையை உருவாக்குவான்

மறக்க நினைப்பதை
மறக்காமல் நினைப்பதே
மனதுக்கு வேலை

அன்பு என்பது
ஒரு அழகிய உணர்வு
அதை அலட்சியபடுத்துபவர்களிடம்
காட்டி வீணடிக்காதீர்கள்
அழகாய் கொண்டாடி
தீர்ப்பவர்களிடம் காட்டுங்கள்

வெற்றி அடைய விரும்பினால்
பயத்தை அடக்க கற்றுக்கொள்

இந்த உலகத்தில்
நடக்கும் அனைத்து
நிகழ்வுகளுக்கும்
ஒரு காரணம் உண்டு
அதை தேடி அறிய தான்
நமக்கு நேரம் இருப்பதில்லை

தனக்கு
திறமை இருக்கிறது
என்பதை ஆணவத்தால்
வெளிப்படுத்துவதை விட
ஆசானாய் இருந்து
வெளிப்படுத்த முயல்வதே
ஆகச் சிறந்தது

சகித்துக்கொண்டு
வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல்
வாழ்வதே வாழ்க்கை

நிலைமையை எப்போதும்
மாற்ற முடியாது
ஆனால் அதை நோக்கும்
நம்மை மாற்ற முடியும்

பிடித்தவர்கள் சொல்லும்
அன்பான காலை வணக்கமும்
பிடித்தவர்கள் சொல்லும்
பிடித்த வார்த்தைகளும்
அன்றைய நாளை
மேலும் சிறப்பான
நாளாக அமைகிறது
அனைவருக்கும் சிறப்பான
நாளாய் அமைய வாழ்த்துக்கள்

வலி நேரத்தில் மட்டுமல்ல
நம் வாழ்க்கையின்
ஒவ்வொரு தருணத்திலும்
உண்மையான நேசம் தேவையானது