தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்
தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்
ஒரு துளி அன்பை
கொடுத்து நூறு துளி
தண்ணீரை விலை கேட்பது
தான் இந்த வாழ்க்கை
வாழ்க்கை ஒரு கடல்
நீந்தத் தெரிந்தால்
அலைகள் கூட நண்பர்களாகும்
ஹிட்லர் வாழ்க்கையும்
வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும்
வேண்டாம்
அவரவர்க்கு உண்டான
வாழ்க்கை வாழ்ந்தால் போதும்
உலகம் அழகாய் தெரியும்
சாதிப்பவர்கள் யாரும்
பெருமை பேசுவதில்லை
பெருமை பேசுபவர்கள்
யாரும் சாதிப்பதில்லை
விதி என்பது உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது
உங்கள் விதியை நீங்களே
உருவாக்கத் தவறும்போது
அது தலைவிதியாகிறது
வெற்றியே நிரந்தரமல்ல
எனும் போது
தோல்வி மட்டும்
என்ன விதிவிலக்கா
இ(எ)துவும் கடந்து போகும்
எல்லாத் துயரங்களையும்
ஆற்றிவிடும் சக்தி
காலத்திற்கு இருக்கிறது
நம்பிக்கையுடன் செயல்படு
வெற்றி என்பது
ஒரு பந்தயம் இல்லை
அது ஒரு பயணம்
நான் விடும் மூச்சு காற்றில்
தான் நீ வாழ்கிறாய் என்னை
அழிப்பது உன்னை நீயே
வதைப்பதற்கு சமம்
இப்படிக்கு மரங்கள்