நம்பிக்கையுடன்
மின்னும் ஒருவர்
வாழ்வின் ஒளியாக மாறுவார்

தலையிட வேண்டிய
இடத்தில் மட்டுமே தலையிடு
இல்லையென்றால்
அமைதி போய்
தொந்தரவு வரும்

தன் திறமையின் மீது
ஆழமான நம்பிக்கை கொண்ட
ஒருவனின் பார்வை எதிர்
உள்ளவர்களுக்குத் திமிராகத்
தோண்றுவதில் திவறில்லை

சில இழப்புக்கள் வலியை தருகின்றது
சில இழப்புக்கள் வலிமையை தருகின்றது

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்

துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம்
துணிச்சல் தரும்

சில நொடிகளில்
எடுக்கும் முடிவுகள்
வாழ்க்கையையே
புரட்டி போட்டு
விட்டு செல்கிறது

கனவு காண்பது எளிது
அதைச் சாதிப்பதே வலிமை

கனவுகள்
சிதறும் போது மட்டும்
உணர்வுகள் அழுகின்றன

தோல்வியை எண்ணாதவன்
வெற்றியை சுவைக்கும்
நேரத்தை தீர்மானிக்கிறான்