வாழ்வை திட்டமிட முடியாது ஆனால் எதிர்நோக்கி நடக்கலாம்
நம்மை எந்த இடத்தில் வச்சிருக்காங்கன்னு தெரியாமலே சில பேர் கிட்ட பேசிட்டு இருப்போம் முட்டாள் மாதிரி
சிரமம் தாங்கிய மனதில்தான் உண்மையான வெற்றி பிறக்கிறது
சில சந்தர்ப்பங்களில் இழப்பதற்கும் தயராக இருங்கள் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை
வலியை சொல்ல வார்த்தைகள் இல்லாதபோது கண்ணீர் தான் பேசும் மொழி
பிறர் பாராட்டும் முன் நீ உன்னை நம்புவதே வெற்றியின் ஆரம்பம்
கிடைக்க கிடைக்க திகட்டாத ஒன்று நாம் நேசிக்கும் ஒருவரின் அன்பு
உளறல்கள் கூட கவிதையாகிறது சில நேரங்களில்
வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காலம் அவ்வப்போது சிலவற்றை கொடுத்தும் சிலவற்றை திடீரென பறித்தும் கொள்கிறது
கடந்த காலங்களை நம்மால் மாற்றவோ மறக்கவோ திருத்தியமைக்கவோ முடியாது நடந்தவைகளை ஏற்கத்தான் வேண்டும் ஆனால் எதிர்காலத்தை மாற்றமுடியும் இறுதியான முடிவினை உறுதியாக எடு