வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரிகள் நீ
நேசித்த இதயத்தில்
சுவாசிக்க வைத்த இதயம் நீ

நமது பிறப்பு ஒரு
சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு
ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்

உன் முயற்சி தான்
உனக்கான அடையாளம்
வெற்றி அதன் பரிசு

வாழ்க்கை ஒரு கதை அல்ல
அதை எழுதுவது நீ தான்

சோதனை வந்தால்
பயந்து ஓடாதே
அது உன்னைக் கற்பிக்க
வந்த ஆசான்தான்

கண்ணீரில் கரைப்பதைவிட
புன்னகையில் கலைத்து
விடுவோம் கவலைகளை

தொட்டுச்செல்லும் நினைவுகளை
விடாமல் துரத்துகின்றது மனம்

உழைப்பின் குரல் அமைதியானது
ஆனால் அதின் விளைவு முழங்கும்

பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது

சில நினைவுகள் வலிக்காது
ஆனால் மறக்கவும் முடியாது