நல்ல விஷயத்திற்காக
தனியாக நிற்க வேண்டிய
சூழ்நிலை வந்தாலும்
தைரியமாக நில்

பேச வேண்டிய நேரத்தில்
மட்டும் பேசினால் உங்கள்
வாழ்க்கை இனிமையாக இருக்கும்

காலத்திற்கு தகுந்த மாதிரி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலம் போய்
ஆளுங்களுக்கு தகுந்த மாறி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலக்கொடும வந்துருச்சு

கோபத்தின் நேரத்தில்
அமைதியை காப்பாற்றுவது
அறிவின் அடையாளம்

ஒவ்வொரு நாளும்
புதியதாய் மலர்வது
பூக்கள் மட்டுமல்ல
நம் மனங்களும் தான்
நல் எண்ணம் விதைப்போம்
நலமாக மகிழ்வாக வாழ்வோம்

சோகத்தை தாண்டி
எழுந்து நின்றால்
வாழ்வின்
புதிய படிகள் தெரியும்
ஒவ்வொரு விழுதும்
அனுபவம் என்ற
கண்ணாடியை
பளபளப்பாகச் செய்யும்

அன்பு கிடைக்கவில்லையே
என்று ஏங்காதீர்கள்
அன்பை கொடுக்கப் பழகுங்கள்
அன்பு தானாக கிடைக்கும்

அழ நினைத்தால் ஆசைதீர
அழுதுவிடு கண்ணீரின் முடிவில்
சுமைகளும் கரையுமென்றால்

தொலைவை கடப்பதற்குள்
தொலைந்து போகிறது
வாழ்க்கை

சிறு மகிழ்ச்சிகளை
சேமிப்பவன் தான்
பெரிய வாழ்க்கையை கட்டியவன்