அதிக உரிமை
எடுக்காதே
கொடுக்காதே
ஒருநாள்
வெறுப்பாய் வெறுக்கபடுவாய்
தவறுகளை எல்லாம்
அழித்து விட்டு
வரையும் போது ஓவியம்
அழகாகிறது
வாழ்க்கையிலும்
அப்படி ஒரு சந்தர்ப்பம்
கிடைத்தால்
உறவுகளும் வரமாகிவிடும்
சவால்கள் வந்தால்
சரிவை நினைக்காதே
வளர்ச்சியை கற்பனை செய்
வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு
வலிகளை சுமந்து
வழியைத் தேடும் பயணம்
தான் வாழ்க்கை
நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்
எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்
பொறாமையை விட்ட நாளே
பாதை தெளிவாகும்
விழுந்தாலும் எழுவதில்
வாழ்க்கையின் அழகு
சிறு முயற்சிகள் பெரும்
மாற்றங்களை உருவாக்கும்
சிரிப்பின் பின்னால்
சோகத்தை மறைத்திருப்பது தான்
சிலரின் தினசரி போராட்டம்
📖 பக்கம் 214 / 606
📋 Copied