வாழ்க்கை சொர்கமாவதும்
நரகமாவதும்
நம் எண்ணங்களை பொறுத்தே

முயற்சியில் விலை இல்லை
ஆனால் அதன் மதிப்பு
அளவில்லாதது

நினைத்த ஒன்று
நினைக்காத நேரத்தில்
கிடைப்பதென்பது பேரழகு

கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது

எதிர்பார்ப்புகள் பல
என் மனதில் எழுந்தாலும்
ஏமாற்றமே என்றும்
எனக்கு நிலையாகிறது

வாழ்வின் அழகு நிறைவை
அடைவதில் அல்ல
குறைகளுடன் வாழத் தெரிந்துகொள்வதில்

நீ வெற்றிபெற வேண்டுமானால்
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை

பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம்

வலித்தாலும்
அவர்கள் முன்
வலிக்காதது போல
நடிப்பது கலைதான்

சில உறவுகள் நம்மிடம்
ஆரம்பத்தில் காட்டும்
அன்பை கடைசி வரை
காட்டுவது இல்லை